இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜெய் ரிச்சர்ட்சன் விலகல்..! வெளியாகிய தகவல்
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜெய் ரிச்சர்ட்சன் விலகல்.
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய வீரரான ஜெய் ரிச்சர்ட்சன் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான ஒரு நாள் தொடர் மார்ச் 17 அன்று நடைபெறவுள்ளது. முன்னதாக பிக் பாஷ் லீக் தொடரில் பங்கேற்ற பின்னர் ஜெய் ரிச்சர்ட்சனுக்கு தொடையில் காயம் ஏற்பட்டது.
இந்த காயத்தினால் தற்பொழுது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் ரிச்சர்ட்சன் பங்கேற்பதும் சந்தேகமாக உள்ளது. ரிச்சர்ட்சனை ரூ.1.5 கோடிக்கு மும்பை அணி ஏலத்தில் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.