ரஜினிகாந்த் கட்சி தொடங்காததால், அண்ணாமலை பாஜகவில் இருக்கிறார்.! காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேட்டி.!

Default Image

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்காத காரணத்தால் தான் அண்ணாமலை பாஜகவில் நீடிக்கிறார். – காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பேச்சு. 

இன்று சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் இன்று, ஆலங்குடி, திருமயம் சட்டமன்ற தொகுதியில் புதியதாக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு நியமன கடிதங்களை வழங்கினார்.

பாஜக சித்தாந்தம் : அந்த நிகழ்வின் போது பேசிய கார்த்தி சிதம்பரம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சித்தாந்த ரீதியாக பாஜகவில் இணைந்து பணியாற்றி வருபவர் இல்லை என குறிப்பிட்டார்.

ரஜினிகாந்த் கட்சி : மேலும், நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்காத காரணத்தால், அண்ணாமலை தற்போது பாஜகவில் நீடிக்கிறார். எனவும் சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டார்.

ரஜினி விலகல் : நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக கூறி வந்து,பிறகு தனது உடல் நிலை ஒத்துழைக்காத காரணத்தால் அந்த முடிவை கைவிட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்து.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்