மாணவர்கள் கவனத்திற்கு; நீட் தேர்வு விண்ணப்பம் தொடக்கம், விண்ணப்பிப்பது எப்படி.!
மருத்துவக்கல்லூரிகளில் நுழைவதற்கான தேசிய நுழைவுத்தேர்வு நீட்- க்கான விண்ணப்பம் இன்று முதல் தொடங்கியுள்ளது.
தேசிய தேர்வு முகமையானது(NTA), மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கான நீட்(NEET) நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. இந்த தேர்வு முகமையானது, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இளங்கலை (NEET UG) 2023க்கான விண்ணப்பத்தை இன்று முதல் தொடங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் அதிகாரப்பூர்வ NTA இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 7 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி.எஸ் இளநிலை படிப்புகளுக்கான தேர்வுக்கான விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் திகாரப்பூர்வ NTA இணையதளத்தைப் பார்வையிட்டு அதன்பிறகு தேவையான அனைத்து தனிப்பட்ட மற்றும் கல்வி விவரங்களையும், ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களையும் பதிவேற்ற வேண்டும், விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
கடந்த 4 ஆண்டுகளில் (2019-2022) ஒடியா, மராத்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் NEET UG பதிவு குறைந்துள்ளது. தேசிய தேர்வு முகமை (NTA) பகிர்ந்துள்ள தரவுகளின்படி இந்தி, தமிழ், அஸ்ஸாமி மற்றும் பெங்காலி ஊடகத்திற்கான பதிவுகள் இந்த ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன.
விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரபூர்வ வலைதளமான http://neet.nta.nic.in க்கு சென்று பார்வையிடவும்.
- முகப்புப் பக்கத்தில் உள்ள NEET UG 2023 பதிவுக்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- புதிய பதிவைக் கிளிக் செய்து, பெயர், பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை நிரப்பவும்.
- பதிவு செய்தவுடன், உங்கள் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
- விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும், அதன் பிறகு சேமித்து, சமர்ப்பித்து, கட்டணத்தைச் செலுத்தவும்.
- விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கி சேமித்து வைத்துக்கொள்ளவும்.