திருவள்ளுவர் சிலை 7 மாதங்களுக்கு பிறகு பொது மக்களுக்கு அனுமதி.!
திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி நிறைவடைந்து பொதுமக்களுக்கு மீண்டும் அனுமதி.
கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணிகளுக்காக, பொதுமக்களுக்கு அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அந்த பணிகள் முழுமையாக நிறைவடைந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடலின் அருகில் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளதால் அடிக்கடி உப்புக் காற்றினால் சேதமடையாமல் இருப்பதற்கு 4 வருடங்களுக்கு ஒருமுறை அதன்மீது ரசாயனக்கலவை பூசும் பணி நடைபெறுவது வழக்கம், இந்த நிலையில் நடைபெற்ற பராமரிப்பு பணியில், திருவள்ளுவர் சிலையின் மீது படிந்துள்ள உப்பினை முழுவதுமாக அகற்றி தண்ணீர் மூலம் சுத்தம் செய்யப்பட்டு, ஜெர்மனியில் இருந்து கொண்டுவரப்பட்ட ரசாயனக்கலவை பூசும் பணி நிறைவுற்றது.
தற்போது இந்த பராமரிப்பு பணிகள் நிறைவுற்றதால் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. தற்போது 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சுற்றுலாப்பயணிகளுக்கு திருவள்ளுவர் சிலையை பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.