படப்பிடிப்பில் கிரேன் விபத்து…நூலிழையில் உயிர் தப்பிய ஏ.ஆர்.ரஹ்மான் மகன்.!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகன் ஏ.ஆர்.அமீன் விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் அவரது தந்தையை போலவே, இசையில் ஆர்வம் காட்டி இசையமைப்பாளராக வளம் வந்துகொண்டு இருக்கிறார். அவ்வப்போது, சொந்தமாக இசைக்கச்சேரியும் நடத்தி வருகிறார். அந்த வகையில், இதனையடுத்து, நேற்று அமீன் ஒரு பாடலின் படப்பிடிப்பில் பங்கேற்று இருந்தபோது, ஒரு பெரிய கிரேன் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் கிரேன் விபத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். இது குறித்த புகைப்படத்தையும், தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு அதிர்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். ” இன்று நான் பாதுகாப்பாகவும் உயிருடனும் இருப்பதற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கும், எனது பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும், நலம் விரும்பிகளுக்கும், எனது ஆன்மிக ஆசிரியருக்கும் நன்றி கூறுகிறேன்.
View this post on Instagram
மூன்று இரவுகளுக்கு முன்பு, நான் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பில் இருந்தேன், கேமரா முன் நடிப்பதில் கவனம் செலுத்தியபோது, பொறியியல் மற்றும் பாதுகாப்பை குழு கவனித்துக்கொண்டிருக்கும் என்று நான் நம்பினேன். நான் அந்த இடத்தின் நடுவில் இருந்தபோது கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முழு டிரஸ் மற்றும் சரவிளக்குகள் கீழே விழுந்தன. இங்கும் அங்கும் சில அங்குலங்கள் இருந்திருந்தால், சில நொடிகள் முன்னரோ அல்லது பின்னரோ, மொத்த ரிக் நம் தலையில் விழுந்திருக்கும். நானும் எனது குழுவினரும் அதிர்ச்சியடைந்து அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை” என பதிவிட்டுள்ளார்.
விபத்து குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில், நாங்கள் அனைவரும் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம், இந்த சம்பவம் குறித்த விசாரணையின் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். படப்பிடிப்பு தளங்களில் உலகத் தரம் வாய்ந்த பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.