மகளிர் தினம் 2023 : பெண்களை சிறப்பாக உணர வைக்கும் பரிசுகள் என்னவென்று தெரியுமா..?

Default Image

சர்வதேச மகளிர் தினம் :

முந்தைய காலங்களில் ஆணாதிக்கம் அதிகமாக இருந்ததால் பெண்கள் அனைவரும் அவரது திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் தவித்திருந்தனர். அந்த நிலை தற்போது மாறியதோடு ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர். இந்த நாளில் அவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும், அவர்களின் சாதனைகளை பாராட்டும் விதமாகவும் கொண்டாடப்படுகிறது. வருடந்தோறும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

women's day

 

இந்த நாளில் ஆண்கள் பெண்களுக்கு தரும் பரிசுகளால் அவர்களை சிறப்பாக உணரவைக்க முடியும். அத்தகைய பரிசுகளில் 5 பரிசு பற்றி கீழே விரிவாக பார்க்கலாம்.

புத்தகம் :

books

உங்கள் அம்மா, தோழி, சகோதரி அல்லது காதலி புத்தகப் பிரியர் என்றால் அவர்களுக்குப் புத்தகத்தைப் பரிசாக வழங்குங்கள். அவர்களுக்கு பிடித்த, படிக்க விரும்பும் மற்றும் நீண்ட காலமாக தேடிக்கொண்டிருக்கும் புத்தகங்களைத் நீங்கள் கண்டுபிடித்து, அதனை அழகான பரிசு தாளில் வைத்து அவர்களிடம் கொடுங்கள். அந்த புத்தகத்தில் உங்கள் கையால் சில குறிப்புகளையும் எழுதி கொடுப்பது, நீங்கள் கொடுத்தப் பரிசை கூடுதல் சிறப்புடையதாக மாற்றும்.

மேக்கப் கிட்:

makup kit

ஒவ்வொரு பெண்ணும் அவர்களது வயதைப் பொருட்படுத்தாமல் அழகாக வைத்துக்கொள்ள மேக்கப் செய்து கொள்ள விரும்புவார்கள். அந்த வகையில் நீங்கள் அவர்கள் விரும்பும் நிறுவன பிராண்டைத் தேர்வுசெய்து, லிப்ஸ்டிக் உள்ளிட்ட அனைத்து மேக்கப் கிட்டுகளுடன் ஒரு இனிமையான குறிப்பை வைத்து பரிசாக வழங்குங்கள்.

கைக்கடிகாரம் :

ladies watch

பெண்களுக்கு மிகவும் பிடித்த பொருள்களில் ஒன்றுதான் இந்த கைக்கடிகாரம். உங்கள் தாய், சகோதரி அல்லது காதலி வேலை செய்யும் பெண்ணாக இருந்தால், அவர்களுக்கு கைக்கடிகாரத்தைப் பரிசளிக்கவும். அவர்கள் அந்த கடிகாரத்தைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் உங்களையும் உங்களுடன் இருந்த இனிமையான நினைவுகளையும் நியாபகப்படுத்தும்.

புகைப்பட ஆல்பம் :

photo album

பெண்களுக்கு நீங்கள் அவர்களுடன் இருந்த இனிமையான நினைவுகளையும் நியாபகப்படுத்தும் விதமாக தனித்துவமிக்க புகைப்பட ஆல்பத்தை பரிசாக வழங்குங்கள். அது உங்கள் அன்பை உணர வைப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். இது ஒரு பெண்ணுக்கு மிகவும் அழகான, உணர்ச்சிகரமான மற்றும் அர்த்தமுள்ள பரிசாக இருக்கும்.

நகைகள் :

jewellery

பெண்களுக்கு நகைகள் மீதான பற்று மிகவும் அதிகம். அதுவும் அவர்களாவது மனதிற்கு பிடித்தவர்கள் தரும் நகைக்கு பெண்களின் மனதில் ஒரு தனி இடமே உண்டு. அந்தவகையில் உங்கள் இருவருக்கும் இடையில் உள்ள உறவு அல்லது சிறப்பான நிகழ்வுகளை குறிக்கும் வகையில் நகைகளை உருவாக்கி அவர்களுக்கு பரிசளிக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்