97 நாட்களுக்கு பிறகு மீண்டும்..! ஒரே நாளில் 300 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று..!

Default Image

இந்தியாவில் 97 நாட்களுக்குப் பிறகு 300 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

கடந்த 2020 ஆம் ஆண்டு உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தீவிரமாக பரவ தொடங்கிய நிலையில் கோடிக்கணக்கான மக்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடுகளிலும் அந்தந்த நாட்டு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பலருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் தற்பொழுது வரை நடைமுறையில் உள்ளது. இந்த கட்டுப்பாடுகளால் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வந்த நிலையில் தற்பொழுது தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் 97 நாட்களுக்கு பிறகு ஒரே நாளில் 334 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,686 ஆக பதிவாகியுள்ளது. தொற்றினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,775 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,54,035 ஆக பதிவாகியுள்ளது என்று  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
2025 jallikattu Competition
RoadAccident
bank robbry
Arunvijay Bala
Bumrah - Bhuvneshwar kumar
Vidaamuyarchi Trailer