திடீர் ட்விஸ்ட்…’சீதா ராமம்’ இயக்குனருடன் இணையும் சூர்யா.! வெளியான சூப்பர் தகவல்.!

Default Image

‘சீதாராமம்’ படத்தின் இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கும் அடுத்த படத்தில், நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தனது 42-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக “சூர்யா 42” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

Suriya42
Suriya42 [Image Source : Google ]

இந்த திரைப்படத்தில் சூர்யா இதுவரை இல்லாத அளவிற்கு 13 கெட்டப்கள் போட்டுகொண்டு 5 கதாபாத்திரங்களில் நடித்துவருவதாக சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட படம் 10 மொழிகளில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் எனவும் தெரிகிறது.

Vaadivasal
Vaadivasal [Image Source : Twitter]

இந்த படத்தில் நடித்துமுடித்த பிறகு நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடிவாசல்  திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், சூர்யா அடுத்ததாக ‘சீதாராமம்’  படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான  இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Hanu Raghavapudi suriya
Hanu Raghavapudi suriya [Image Source : Google

சூர்யாவை சந்தித்து இயக்குநர் ஹனு ராகவபுடி  ஒரு அருமையான கதையை கூறியதாகவும் அந்த கதை அவருக்கு பிடித்ததாகவும் அதனால் சம்மதம் தெரிவித்துவிட்டதாக தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் ஏற்கனவே ‘சீதாராமம்’ எனும் தரமான படத்தை இயக்கிய ஹனு ராகவபுடி இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக பரவும் தகவல் அவருடைய ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்