ஆன்லைன் ரம்மியால் எனது அழகான வாழ்க்கை தொலைந்தது – தற்கொலை செய்த நபர் கடிதம்

Default Image

ஆன்லைன் ரம்மியால் தனது அழகான வாழ்க்கையை தொலைத்து விட்டதாக தற்கொலை செய்து கொண்ட வினோத்குமார் கடிதம்.

இன்று இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களுக்கு அடிமையாகி உள்ளனர். பொழுதுபோக்கிற்காக இந்த விளையாட்டில் ஈடுபடுபவர்கள், காலப்போக்கில் இதற்கு அடிமையாகி விடுகின்றனர். இந்த விளையாட்டால், தங்களது உழைப்பையும், பணத்தையும் இழப்பதோடு, இறுதியில் தங்களது உயிரையே மாய்த்து கொள்கின்றனர்.

ஆன்லைன் ரம்மியால் தற்கொலை 

இந்த நிலையில், சென்னை தாம்பரத்தை சேர்ந்த மருந்து நிறுவன பிரதிநிதி வினோத்குமார். இவர் மாடம்பாக்கம் கணபதி காலனியில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி உள்ளார்.

வினோத்குமார் பல லோன் ஆப்களில் 20 லட்சம் வரை கடன் வாங்கி விளையாடி வந்துள்ளார். கடன் கொடுத்த லோன் ஆப்கள் தரப்பில் வந்த நெருக்கடி மற்றும் பணத்தை இழந்த வேதனையில் வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை கடிதம் 

இந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டவர் எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், ஆன்லைன் ரம்மியால் தனது அழகான வாழ்க்கையை தொலைத்து விட்டதாக வினோத்குமார் கடிதத்தில் எழுதியுள்ளார்.

தன்னை நம்பி கடன் கொடுத்தவர்கள் மன்னிக்கும்படியும் கேட்டு கடிதத்தில் உருக்கத்துடன் எழுதியுள்ளார். மேலும் தயவு செய்து ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள். எனது மரணமே கடைசியாக இருக்கட்டும் என்றும் அதில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்