காலா கர்நாடகத்தில் வெளியாக கர்நாடக முதலமைச்சருடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேச வேண்டும்!பொன்.ராதாகிருஷ்ணன்

Default Image

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ,கர்நாடகத்தில் காலா படத்தை வெளியிட, அம்மாநில முதலமைச்சருடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேச வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும்  எஸ்.வி. சேகர் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் அதன் கடமையில் இருந்து தவறக்கூடாது என்றும் தமிழகத்தில் புதிய தொழிற்சாலையை வரவிடமால் தீவிரவாத கூட்டம் செயல்பட்டு வருகிறது என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 5 ஆண்டுகளாக, திமுகவுடன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளது. கடந்த 5 ஆண்டில் ஒரு முறை கூட திமுக, கர்நாடக மாநிலத்திடம் கோரிக்கை வைத்தது இல்லை.அரசுக்கு எதிராக பேசுவதில் தவறில்லை , ஆனால் புரட்சி செய்யும் நோக்கில் சிலர் செயல்படுகின்றனர். தமிழனை உயர்த்துவதாக கூறியவர்கள் துரோகம் செய்துவிட்டார்கள் என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்