மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு – டெல்லி நீதிமன்றம் அறிவிப்பு

Default Image

முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை 2 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி.

டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக கூறி ஆம் ஆத்மியை சேர்ந்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சிபிஐயால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். கடந்த ஞாயிற்று கிழமை சிபிஐ சுமார் 8 மணிநேரம் விசாரணைக்கு பிறகு, அவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என கூறி கைது செய்தனர்.

சிபிஐ கைதை தொடர்ந்து, மணீஷ் சிசோடியா தனது துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து, 5 நாள் நீதிமன்ற காவல் முடிந்து இன்று மீண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட உள்ளார்.

இந்த நிலையில், டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை மார்ச் 10ம் தேதி நடைபெறும் என்று டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் 5 நாள் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், ஜாமீன் மனு மீதான விசாரணை மார்ச் 10ஆம் தேதி நடைபெறும் என டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பாக சிபிஐக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நிலையில், 3 நாள் காவலில் விசாரிக்க சிபிஐ அனுமதி கேட்ட நிலையில், 2 நாள் காவலில் விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே 5 நாள் காவலில் மணீஷ் சிசோடியா விசாரிக்கப்பட்ட நிலையில் மேலும் 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்