தேர்தலில் குறிப்பிட்டபடி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்.. அமைச்சர் உதயநிதி பேச்சு!
தேர்தல் நேரத்தில் குறிப்பிட்டபடி முதலமைச்சர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் என அமைச்சர் உதயநிதி பேச்சு.
கரூர் மாவட்டதில், 1,22,019 பயனாளிகளுக்கு ரூ.267 கோடி மதிப்பிலான நல உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி மு.க. ஸ்டாலின், பிற மாவட்டம் பொறாமைப்படும் அளவுக்கு கரூர் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் நேரத்தில் குறிப்பிட்டபடி முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
பேருந்து கூடுகட்டும் தொழில், கொசுவலை, விவசாயம் என 3 தொழில்கள் நிறைந்த மாவட்டம் கரூர் மாவட்டம். காலை உணவு திட்டம் மூலம் 2 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் காலை உணவு அரசு பல்ளிய்களில் தான் சாப்பிட்டு வருகிறேன் என்றார்.
மேலும், பெண்கள் முன்னேற்றத்திற்கான ஒரே ஆயுதம் கல்வி மட்டும் தான். ஒவ்வொருவருக்கும் நாம் என்னவாக வேண்டும் என்ற எண்ணம் ஆழ்மனதில் இருக்கும், அதை நோக்கி பயணிக்க, உழைக்க தொடங்க வேண்டும். பெண்கள் தங்களின் கனவுகளை நோக்கி பயணிக்க வேண்டும் என தெரிவித்தார்.