வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு!
தமிழ்நாட்டில் 12 பேர் கழுத்தறுத்து கொலை என தவறான தகவலை பரப்பியதால் வழக்குப்பதிவு.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தியை பரப்பியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உமாராவ் மீது தமிழ்நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தி பேசியதால் தமிழ்நாட்டில் 12 பேர் கழுத்தறுத்து கொலை என தவறான தகவலை பரப்பியதால் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான தகவல் பரவியதை அடுத்து, காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக, தமிழக அரசும், பீகார் அதிகாரிகளும் இன்று மாலை ஆலோசனை நடத்துகின்றனர். மறுபக்கம் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.