பிரதமர் மோடியுடன் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் சந்திப்பு.!

Default Image

இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், இந்தியாவில் காலநிலை, சுகாதாரம், அறிவியல் மற்றும் புதுமை குறித்து பல நிகழ்வுகள் பற்றி நேரடியாக தெரிந்து கொண்டு வருகிறார், இந்த நிலையில் அவர் பிரதமர் மோடியுடன் சந்தித்து பேசியுள்ளார். இது குறித்து பில் கேட்ஸ் கூறும்போது, பிரதமர் மோடி என்னுடன் தாராளமாக நேரம் செலவழித்து பேசினார்.

எனது இந்திய பயணத்தில் முக்கிய அம்சம் மோடியுடன் நடந்த சந்திப்பு தான் என்று கூறிய கேட்ஸ், அறிவியல் துறையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் அறிவியலும் புதுமையும் சமத்துவமின்மையை எவ்வாறு குறைக்க உதவும் என்பது குறித்தும் நாங்கள் இருவரும் பேசினோம் என்று கூறினார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் தொற்றுநோய்களின் போது மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளன. புதிய உயிர்காக்கும் கருவிகளை தயாரிப்பதோடு, இந்தியாவும் அவற்றை வழங்குவதில் சிறந்து விளங்குகிறது என்று பில் கேட்ஸ் மேலும் கூறினார். இந்த ஆண்டு இந்தியாவின் ஜி20 தலைமை பதவி குறித்தும் நாங்கள் விவாதித்தோம் என அவர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்