எச்யுஐடி (HUID) இல்லாத தங்க நகைகள் விற்க தடை..! நுகர்வோர் விவகாரங்கள் துறை..

Default Image

தனிப்பட்ட ஹால்மார்க் அடையாளம் இல்லாத தங்க நகைகள் மார்ச் 31ம் தேதிக்குப் பிறகு விற்பனை செய்ய அனுமதி இல்லை.

தனிப்பட்ட ஹால்மார்க் அடையாளம் (HUID) இல்லாமல் ஹால்மார்க் உத்திரவாதம் செய்யப்பட்ட தங்க நகைகள் மற்றும் தங்க கலைப் பொருட்கள் மார்ச் 31ம் தேதிக்குப் பிறகு விற்பனை செய்ய அனுமதிக்கப்படாது என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Gold Price Today 1

தனிப்பட்ட ஹால்மார்க் அடையாளம் (HUID):

தங்க நகைகளின் தரத்தை மதிப்பிடுவதற்காக நகைகள் ஒவ்வொன்றிலும் தனித்துவமான 6 இழக்க எண்கள் அச்சிடப்பட்டிருக்கும். அதாவது 22K916 அல்லது 24K916 என்ற தனிப்பட்ட ஹால்மார்க் அடையாளம் (HUID) அச்சிடப்பட்டிருக்கும். தற்பொழுது இந்த 6 இழக்க எண்கள் அச்சிடப்படாமல் ஹால்மார்க் என்று விற்பனை செய்யப்படும் தங்க நகைகள் மற்றும் தங்க கலைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு தடை விதிப்பதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Gold Price 4

நகை விற்பனை செய்ய தடை:

நேற்று உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் இந்திய தர நிர்ணய பணியகத்தின் (பிஐஎஸ்) செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கான கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய நுகர்வோர் விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலர் நிதி காரே, “நுகர்வோர்கள் நலன்களை கருத்தில் கொண்டு தனிப்பட்ட ஹால்மார்க் அடையாளம் (HUID) இல்லாமல் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைகள் மற்றும் தங்க கலைப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

Gold Price Today 5
[File Image]

நம்பிக்கையை வளர்க்கும்:

உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், “இந்தியாவில் உள்ள அனைத்து தயாரிப்புகளிலும் மிக உயர்ந்த தரம் மற்றும் பாதுகாப்பு தரங்களை பூர்த்தி செய்வதை உறுதி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும் இந்த நடவடிக்கைகள் மைக்ரோ அளவிலான அலகுகளை ஊக்குவிப்பதோடு, குடிமக்களிடையே தரமான பொருட்களை வாங்குகிறோம் என்ற நம்பிக்கையை வளர்க்கும்” என்று அவர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்