வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுகிறார்களா? முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு தீவிரம்!

Default Image

வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து 200-க்கும் மேற்பட்ட ரயில்வே போலீசார் பாதுக்காப்பு.

தமிழ்நாட்டில் இருக்கும் வடமாநில இளைஞர்கள் தாக்கப்படுவது தொடர்பான போலியான வீடியோக்கள் பரவின. இது வேறு மாநிலங்களில் நடந்தவை என்றும் பழைய சம்பவங்கள் இதில் புறப்படுகிறது எனவும் கூறப்பட்டது. இதுபோன்று,  திட்டமிட்டு தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

பீகார் சட்டசபையில் எதாரொலி:

bihar04

தமிழ்நாட்டில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதாக பரவிய பொய்யான வீடியோ விவகாரம் பீகார் மாநிலச் சட்டசபையிலும் எதிரொலித்தது. இதுதொடர்பாக கேள்வியை எழுப்பி அங்குள்ள பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனை, முற்றிலும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மறுத்துள்ளார். பரவி வரும் தகவல் போலியானது, வதந்திகளைப் பரப்புவதே பாஜகவின் வேலை என விளக்கமளித்தார்.

பரவும் போலியான வீடியோ:

noetherns04

இதுபோன்று சம்பவங்கள் நடந்தாலும், பீகார் மற்றும் தமிழக அரசும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார். இதனிடையே, சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள், மாநிலத்தை விட்டு வெளியேற ரயில் நிலையங்களில் குவிந்துள்ளதாகவும் பொய்யான தகவல் பரவின. இதனால், தமிழ்நாட்டில் ஒருவித பதற்றமான சூழல் ஏற்பட்டது.

கள ஆய்வில் உண்மை:

holi04

ஆனால், வரும் மார்ச் 8ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், ஹோலியை குடும்பத்துடன் கொண்டாடவே சில வடமாநிலத்தவர் ஆர்வமாகக் கிளம்பி வருவது களஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்திற்கு வந்து பணிபுரியும் பொழுது, அவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களின் விடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மாறுத்துள்ளார்.

டிஜிபி எச்சரிக்கை:

dgp sailendra babu

இது தவறான தகவல், இதுபோன்று தவறான தகவலை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் பாதுகாப்பாக உள்ளார்கள், எந்த தாக்குதலும் நடைபெறவில்லை எனவும் தெரிவித்தார் டிஜிபி, அதுமட்டுமில்லாமல், தொழிலாளர்களுக்கு ஏதேனும் புகார்கள் இருந்தால் எங்களைத் தொடர்புகொள்ள (9498101320/04212970017) என்ற ஹெல்ப்லைன்  அமைத்துள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.

உண்மைக்கு மாறானது:

tngovt&tnpolice

இதன்பின், தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் சில இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சில சமூக வலைதளங்களில் உண்மைக்கு மாறான, தவறான உள்நோக்கத்தோடு, விஷமத்தனமான செய்தி சிலரால் பரப்பப்படுகிறது. இதில் உண்மை இல்லை எனவும் கூறினார.

பலத்த பாதுகாப்பு:

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து 200-க்கும் மேற்பட்ட ரயில்வே போலீசார் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

railweystation044

சென்னை சென்ட்ரல், எழும்பூர், பெரம்பூர், தாம்பரம், திருவள்ளூர், அரக்கோணம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3 மணி நேர பணி சுழற்சி அடிப்படையில் ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வடமாநில இளைஞர்கள் தாக்கப்படுவது தொடர்பான போலியான வீடியோக்கள் பரவியதை தொடர்ந்து பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்