நீட் தேர்வு ஒருபோதும் ரத்து செய்ய்யப்படாது.! பாஜக தலைவர் அண்ணாமலை திட்டவட்டம்.!
மிழக மாணவர்கள் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். நீட் தேர்வை மத்திய அரசு ஒரு போதும் ரத்து செய்யாது. – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.
தமிழக மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு எழுத வேண்டும் என்பது கட்டாயம். இந்த தேர்வு இந்திய அளவில் நடைபெறும். இந்த தேர்வு முறையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
நீட் ரத்து : நேற்று, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கிஷ்ணகிரியில் ஒரு தகறாரில் உயிரிழந்த ராணுவ வீரர் பிரபுவின் குடும்பத்தாரை சந்தித்த,பாஜக சார்பில் நிதியுதவியும் அளித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் நீட் தேர்வு பற்றிய தனது கருத்துக்களை தெரிவித்தார். அவர் கூறுகையில், தமிழக மாணவர்கள் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். நீட் தேர்வை மத்திய அரசு ஒரு போதும் ரத்து செய்யாது. என திட்டவட்டமாக தெரிவித்தார்.
வடமாநில தொழிலாளர்கள் : தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். யாரோ சிலர் பழைய விடியோக்களை பகிர்ந்து தவறான தகவல்களை பரப்புகின்றனர். யார் வந்தாலும் தமிழக மக்கள் வரவேற்கத்தான் செய்வார்கள் எனவும் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார்.