ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின் மகளிர் கல்வி மறுப்பு – ஆளுநர் ஆர்.என்.ரவி

Default Image

ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வீட்டு வேலைக்கு பயன்படுத்தப்படுகின்றனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி  பேச்சு.

சென்னையில் நடைபெற்ற தமிழக பெண் ஆளுமைகளுடன் கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய அவர் பெண்களுக்கு தோழமையான சமுதாயமாக நமது சமுதாயம் இருந்ததில்லை.

அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்காத, பெண்களை பின்னுக்கு தள்ளக்கூடிய எந்த ஒரு நாடும் வளர்ந்தது இல்லை. ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் தமிழகத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் கல்வி  பயின்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வீட்டு வேலைக்கு பயன்படுத்தப்படுகின்றனர் என  குற்றம்சாட்டியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்