டிரென்டிங் செக்ஷனுக்கு பதிலாக புதிய மாற்றத்தைக் கொண்டுவரும் ஃபேஸ்புக் ..!

Default Image
ஃபேஸ்புக் தளத்தில் இருக்கும் டிரென்டிங் செக்ஷனை அகற்றுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஃபேஸ்புக்கில் எதிர்கால செய்தி அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image result for Facebook Trendingஃபேஸ்புக்கில் அதிக டிரென்டிங் ஆகும் தலைப்புகளை அதன் பயனர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில் 2014-ம் ஆண்டு வாக்கில்  டிரென்டிங் செக்ஷன் சேர்க்கப்பட்டது.
ஐந்து நாடுகளில் மட்டும் வழங்கப்பட்டு இருந்த டிரென்டிங் செக்ஷன் வெறும் 1.5% க்ளிக்களை மட்டுமே பெற்று வருவதால் இந்த அம்சம் நீக்கப்படுகிறது. இதே காரணத்திற்காக அடுத்த வாரம் முதல் ஃபேஸ்புக்கில் டிரென்டிங் பகுதி நீக்கப்பட்டு அதன் சேவைகள் மற்றும் மூன்றாம் தரப்பு இன்டகிரேஷன்களும் நீக்கப்படுகிறது.
Image result for Facebook Trendingஃபேஸ்புக்கில் வரும் செய்திகள் உண்மையானதாகவும், நம்பத்தகுந்த நிறுவனங்கள் தான் செய்திகளை வழங்குகின்றன என்பதை உறுதி செய்ய புதிய வழிமுறைகளை ஃபேஸ்புக் கண்டறிந்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Image result for Facebook Trendingஇந்தியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுமார் 80 செய்தி நிறுவனங்களை கொண்டு பிரேக்கிங் நியூஸ் லேபெல் ஆப்ஷனை ஃபேஸ்புக் சோதனை செய்து வருகிறது. இவை செய்தி நிறுவனங்கள் தங்களது நியூஸ் ஃபீட்களில் பிரேக்கிங் நியூஸ் இன்டிகேட்டரை பதிவிட வழி செய்யும்.
ஃபேஸ்புக் செயலியின் ஈவென்ட்ஸ் பகுதியில் டுடே இன் லோக்கல் நியூஸ் (Today In local news) எனும் அம்சம் பிரத்யேகமாக வழங்க ஃபேஸ்புக் பணியாற்றி வரும் நிலையில், ஃபேஸ்புக் தளத்திலும் இதேபோன்ற அம்சத்தை வழங்கலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் நேரலை மற்றும் தினசரி செய்திகளை தெரிந்து கொள்ள முடியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
Trump - Zelensky
Dhanush - Nayanthara
Shardul Takur
Rain Update
nayanthara and dhanush
PM Modi - Yogi Adhithyanath