பிரதமர் மோடி, அமித் ஷா உடன் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் பீட்டர்சன் சந்திப்பு.!

Default Image

பிரதமர் மோடியுடன் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சன் மரியாதையை நிமித்தமாக சந்தித்துள்ளார்.

இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார், மோடியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பீட்டர்சன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் மூன்று நாள் தி ரைசினா உரையாடல் நிகழ்வில் பீட்டர்சன் விருந்தினராக அழைக்கப்பட்டார்.

இந்த நிகழ்வுக்கு பிறகு பீட்டர்சன் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துள்ளார். பிரதமர் மோடியின் பிறந்தநாளில் சீட்டா வகை சிறுத்தைகளை இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்து பெருமிதம் தெரிவித்த அவர் இது தனக்கு ஒரு மரியாதை என தெரிவித்தார்.

இது குறித்து பேசிய பீட்டர்சன், சிறுத்தைகள் பாதுகாக்கும் திட்டத்திற்கு நம்பமுடியாத பாதுகாவலராக இருந்ததற்கு நன்றி என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் மோடியுடன் நடந்த சந்திப்பில், உங்களது புன்னகை மற்றும் நீங்கள் அளித்த உறுதியான கைகுலுக்கல் எப்போதும் நினைவில் இருக்கும் என்று கூறியுள்ளார்.

பீட்டர்சன் கிரிக்கெட் தவிர வனவிலங்குகளைக் காப்பாற்றுவதிலும் பாதுகாப்பதிலும் தீவிரமாகப் பங்கேற்கிறார் மற்றும் ஆப்பிரிக்காவில் காண்டாமிருகங்களைக் காப்பாற்றும் திட்டத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Kevin Pietersen MBE (@kevinpietersen)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்