லேட்டா வந்தாலும் மாஸாக வந்த அண்ணாச்சி.! ஓடிடியில் வெளியானது “தி லெஜண்ட்”.!
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் ஹீரோவாக நடித்த திரைப்படம் “தி லெஜண்ட்”. இந்த திரைப்படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய ஜெர்ரி & ஜெடி ஆகியோர் இயக்கியிருந்தார்கள். படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.
இந்த திரைப்படம் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, ஆகிய மொழிகளில் திரையரங்களில் வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது என்று கூறலாம். வசூல் ரீதியாக படம் 20 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது ‘தி லெஜன்ட்’ திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Streaming Blasting from 12:30PM⚡️ ????????✨#Legend streaming in @DisneyPlusHS from Today 12.30 PM#LegendinDisneyHotstar#Tamil #Telugu #Malayalam #Hindi @yoursthelegend #Legend #TheLegend #LegendSaravanan @DirJdjerry @Jharrisjayaraj @thinkmusicindia @onlynikil #NM pic.twitter.com/FmRgRncylT
— Legend Saravanan (@yoursthelegend) March 3, 2023
ஓடிடியில் படத்தை பார்த்த பலரும் டுவிட்டரில் தங்களுடைய விமர்சனங்களை கூறி வருகிறார்கள். மேலும், ‘தி லெஜன்ட்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக லெஜண்ட் சரவணன் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.