மேகாலயாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சங்மா!
மேகாலயாவில் பாஜக ஆதரவை தொடர்ந்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார் முதலமைச்சர் சங்மா.
வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியான தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 57 தொகுதிகளிலும் பாஜக 60 தொகுதிகளிலும் போட்டியிட்டது. மேகாலயா சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது. இதில், 74. 32 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
சட்டமன்ற பொது தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிப்பட்டது. தேர்தல் முடிவில், ஆளும் கட்சியான என்பிபி 26 இடங்களில் வென்றுள்ளது. அது போல் காங்கிரஸ் கட்சி வெறும் 5 இடங்களும், பாஜக வெறும் இரு இடங்களில் வென்றுள்ளது. மேலும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும், மற்ற கட்சிகள் 23 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிக தொகுதிகளில் வென்ற என்பிபி கட்சி ஆட்சி அமைக்க பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி தலைவரும், முதல்வருமான சங்மா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். முதலவர் பதவிக்கான ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பாகு சவுகானிடம் வழங்கினார் கான்ராட் சங்மா.