துவண்டு விடாதீர்கள், கவலைப்படாதீர்கள்..! பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுந்து வெற்றி பெறுவோம்..! – விஜயகாந்த்

Default Image

ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகளை கண்டு நமது கழக நிர்வாகிகள் துவண்டு விடாதீர்கள், கவலைப்படாதீர்கள்.பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுந்து இமாலய வெற்றி பெறுவோம் என விஜயகாந்த் அறிக்கை. 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில், 1,09,959 வாக்குகளை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,553 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 7984 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 979 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

விஜயகாந்த் அறிக்கை 

இந்த நிலையில், இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் அனைவரும் எதிர்பார்த்த ஒன்று தான். மாபெரும் வெற்றி பெற்று விட்டதாக மார்தட்டிக் கொள்ளும், திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும், மிகப்பெரிய தொகையை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கி தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

2009-ல் தி.மு.க உருவாக்கிய திருமங்கலம் பார்முலாவை 14 ஆண்டுகளுக்கு பின், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.கவே முறியடித்து விட்டது. பணபலம், அதிகாரபலம், ஆட்சி பலத்தை எதிர்த்து நமக்கு கிடைத்த ஒவ்வொரு வாக்குகளும் ஆயிரம் மடங்கு சமம். இது உண்மைக்கும், நேர்மைக்கும் கிடைத்த வாக்குகள். இடைத்தேர்தலில் இரவு பகல் என பாராமல் உழைத்த நமது நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்