ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி என்பது வாங்கப்பட்ட வெற்றி – டிடிவி தினகரன்
இரட்டை இலை சின்னம் இல்லையென்றால், அதிமுகவின் நிலை மோசமாகி இருக்கும் என டிடிவி தினகரன் பேட்டி.
கடந்த பிப்.27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக என நான்கு முனை போட்டி நிலவியது. இந்த நிலையில், பதிவான வாக்குகளை நேற்று எண்ணும் பணி நடைபெற்ற நிலையில், தேர்தல் முடிவுகளும் வெளியிடப்பட்டது.
இந்த தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில், 1,09,959 வாக்குகளை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,553 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 7984 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 979 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இது வாங்கப்பட்ட வெற்றி
அந்த பெட்டியில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி என்பது வாங்கப்பட்ட வெற்றி. இரட்டை இலை சின்னம் இல்லையென்றால், அதிமுகவின் நிலை மோசமாகி இருக்கும்; இடைத்தேர்தல் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம். வரும் காலத்தில் அனைவரும் ஒரே அணியில் திரண்டு, திமுகவை வீழ்த்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.