Nagaland Election Results:நாகாலாந்தில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலமைச்சராகிறார் நெய்பியு ரியோ
நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் நீண்ட கால முதல் அமைச்சருமான நெய்பியு ரியோ கூட்டணிக் கட்சியான பாஜகவின் உறுதியானவெற்றியை தொடர்ந்து தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
60 தொகுதிகளை கொண்ட நாகாலாந்து சட்டப்பேரவையில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி மற்றும் பாஜக என இரு கட்சிகளும் இணைந்து 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி (என்டிபிபி) 25 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சியான பாஜக 12 இடங்களை வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இணையதnளத்தில் தெரிவித்துள்ளது.
நாகாலாந்தில் உள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது, அங்கு 85.9 சதவீத வாக்குகள் பதிவாகின.