மேகாலயா தேர்தல் நிலவரம்.! முன்னிலையில் முதல்வரும்., துணை முதல்வரும்..!
மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் அவர்கள் தொகுதியில் முன்னணியில் உள்ளனர். ஆனால் அங்கு எந்த கட்சியும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
மேகாலயா சட்டமன்ற தொகுதியில் தேசிய மக்கள் கட்சி 26 இடங்களிலும், பிற கட்சியினர் 25 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 6 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இது, மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மா, தென் துரா தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதே போல, NPP கட்சியை சேர்ந்த, துணை முதல்வர் பிரஸ்டோன் டின்சோங், பைனுர்ஸ்லா சட்டமன்றத் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.
மேகாலயாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால், அங்கு தொங்கு சட்டசபை அமையும் நிலை ஏற்பட்டுள்ளது.