வரலாற்றில் முதமுறையாக நாகலாந்து சட்டப்பேரவைக்கு தேர்வான முதல் பெண் எம்எல்ஏ.!
நாகலாந்து சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முதலாக ஒரு பெண் எம்எல்ஏ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாகலாந்து சட்டப்பேரவை தேர்தலில் 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (NDPP) – பாஜக கூட்டணி 39 இடஙக்ளில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நாகாலாந்து தேர்தலில் வரலாற்று நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. அதில் முதல்முதலாக நாகலாந்து சட்டப்பேரவைக்கு ஒரு பெண் எம்எல்ஏ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி வேட்பாளர் ஹெகானி ஜகாலு என்பவர் திமாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு 1,536 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் நாகாலாந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையை ஹெகானி ஜகாலு பெற்றுள்ளார்.