அடடா நடிகை சமந்தா வா இது..? வைரலாகும் கல்லூரி பருவ புகைப்படம்.!
நடிகை சமந்தா படப்பிடிப்புக்காக விமான நிலையங்கள் சென்றாலோ, அல்லது அவர் லேட்டஸ்டாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டாலோ இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், நேற்று கூட ‘சிட்டாடல்’ வெப் தொடர் படப்பிடிப்பு தளத்தில் சமந்தாவின் கையில் காயம் ஏற்பட்டது.
அதற்கான புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது சமந்தா கல்லூரியில் படிக்கும்போது தனது தோழிகளுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் வைரலாகி வருகிறது.
புகைப்படத்தில் சமந்தா சேலை அணிந்துகொண்டு அழகாக போஸ் கொடுத்துள்ளர். இந்த புகைப்படத்தை பார்த்த அவருடைய ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் சின்ன வயதிலேயே சமந்தா அழகாக இருக்கிறாரே என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் நடிகை சமந்தா ‘சிட்டாடல்’ வெப் தொடரில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள ‘சாகுந்தலம்’ திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.