ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – முதல் சுற்று முடிவுகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம்..!
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை குறித்த அதிகாரபூர்வ முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
கடந்த மாதம் 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைதேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில், 15 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளது.
இந்த நிலையில், இரண்டு சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படாத காரணத்தால், 3-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு
இந்த நிலையில், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை குறித்த அதிகாரபூர்வ முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, முதல்சுற்றில் காங்கிரஸ் – 8429, அதிமுக – 2873, நாம் தமிழர் – 526, தேமுதிக – 112 வாக்குகள் பெற்றுள்ளன.