இடைத்தேர்தல் – 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை துவங்குவதில் தாமதம்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 3ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. 16 மேசைகளில் 15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவை அடுத்து இடைத்தேர்தல் நடைபெற்றது.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டார். இதுவரை இரண்டு சுற்றுகள் முடிவடைந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை பெற்றுள்ளார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 3ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முதல் சுற்று முடிந்து ஒரு மணி நேரம் ஆக உள்ள நிலையில், அதிகாரபூர்வ வாக்கு நிலவரம் தரவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.