ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள், இனி வேகமாக வெளியிடப்படும் – ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைக்கு உட்பட்டு தான் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது என ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைதேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில், 15 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளது.
இரண்டு சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 3-வது சுற்று தொடங்க தாமதமாகியுள்ளது. மேலும், இரண்டு சுற்று முடிவுகள் குறைத்த அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
3வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்
இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி, 3வது சுற்று வாக்கு எண்ணும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 2 சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே 3வது சுற்று எண்ணும் பணி தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள், இனி வேகமாக வெளியிடப்படும். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைக்கு உட்பட்டு தான் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணைய உத்தரவு காரணமாக தான் செய்தியாளர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.