#ByPollBreaking : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை.!
இதுவரையில் எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ்.இளங்கோவன் முன்ணணியில் இருக்கிறார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு ஆரம்பித்த வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.
தபால் வாக்குகள் எண்ணப்பட்டது முதலே திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ்.இளங்கோவன் முன்ணணியில் இருக்கிறார். அவர் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 1374 வாக்குகள் பெற்று முன்னணியில் இருக்கிறார்.
அதே போல தபால் வாக்கு முதலே அடுத்த இடத்தில் இதுவரை எண்ணப்பட்ட வாக்கு விவரங்களில் 447 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு உள்ளார்.