7 பேருக்கு மரண தண்டனை.! லக்னோ என்ஐஏ நீதிமன்றம் உத்தரவு.!
2017 ஆம் ஆண்டு போபால்-உஜ்ஜைன் பயணிகள் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்புடைய 7 பேருக்கு மரண தண்டனை. – லக்னோ நீதிமன்றம் உத்தரவு.
கடந்த, 2017 ஆம் ஆண்டு போபால்-உஜ்ஜைன் பயணிகள் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக 2017, மார்ச் 14ஆம் தேதி, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையதாகவும், அவர்களுடன் இணைந்து கூட்டு சதியில் செயல்பட்டதாவும் முனைந்ததாகவும் உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள காவல் நிலையத்தில் 8 பேர் மீது முதல் முறையாக FIR பதிவு செய்யப்பட்டது . அதன் பிறகு இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ வசம் சென்றது.
ஐஎஸ்ஐஎஸ் : குற்றம் சாட்டப்பட்டவர்கள் உத்தரபிரதேசம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இணைப்பை நிறுவ முயற்சித்ததாகவும், அதனை அதற்கு முன்னரே. கண்டறிந்து என்ஐஏ சோதனை செய்து உண்மைகளை வெளிப்படுத்தினர்.
தீவிரவாத குறிப்புகள் : இந்த சோதனையில், லக்னோவில், ஹாஜி காலனியில் உள்ள மறைவிடத்திலிருந்து சில குறிப்பேடுகள் கைப்பற்றப்பட்டன. அதில், அடுத்தகட்ட தீவிரவாத இலக்குகள் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பது பற்றிய விவரங்கள் பற்றிய குறிப்புகள் இருப்பது என்ஐஏ-வால் கண்டறியப்பட்டது.
இணையத்தில் பங்கரவாத பொருட்கள் : என்ஐஏ விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் கொடியுடன் கூட பல புகைப்படங்களும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த குழு பல்வேறு இடங்களில் இருந்து சட்டவிரோத ஆயுதங்கள், வெடிபொருட்கள் போன்றவற்றை சேகரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ன. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான அதிஃப் முசாஃபர் இணையத்தின் வாயிலாக பயங்கரவாத பொருட்களை வாங்கியதும் சோதனையில் தெரியவந்தது.
குற்றவாளிகள் : இந்த வழக்கு விசாரணை லக்னோவில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (NIA) சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை அதாவது பிப்ரவரி 25 அன்று, ‘கான்பூர் சதி வழக்கு’ தொடர்பாக கைது செய்யப்பட்ட எட்டு பேரும் ஐஎஸ்ஐஎஸ் தொடர்புடைய குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தனர்.
மரண தண்டனை : இவர்களுக்கான தண்டனை விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், 2017 ஆம் ஆண்டு போபால்-உஜ்ஜைன் பயணிகள் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்புடைய 7 பேருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து லக்னோ என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.