திமுக என்ற மூன்றெழுத்தை வைத்து முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த ஆளுநர் தமிழிசை..!
திமுக என்ற மூன்றெழுத்தை வைத்து முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஆளுநர் தமிழிசை
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், ஆளுநர் தமிழிசை வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். மக்களுக்கு “தி”னமும் “மு”ழு உடல் நலத்துடன் “க”டமையாற்ற பிரார்த்தித்து வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.