முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் – கேரள முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து!

Default Image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பிறந்தநாள் வாழ்த்து. 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மரக்கன்று நட்டி வைத்தார்.

அதனை தொடர்ந்து, அங்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். அதனை தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் பிறந்தநாள் பரிசுகளை வழங்கினர். மேலும், தனக்கு வாழ்த்து தெரிவித்து புத்தகங்களை வழங்கியவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி நன்றி தெரிவித்தார்.

இந்த நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்து பதிவில், ‘அன்புத் தோழர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்; கேரளா – தமிழ்நாடு பிணைப்பை வலுப்படுத்தும் தங்களின் முயற்சிகள் பாராட்டத்தக்கவை; கூட்டாட்சி, மதச்சார்பின்மை மற்றும் தாய்மொழிகளை பாதுகாப்பதன் மூலம், நாடு முழுவதிலிருந்தும் அன்பை பெற்றுள்ளீர்கள்; நல்ல ஆரோக்கியத்துடன், அனைத்திலும் வெற்றியடைய விரும்புகிறேன்!’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்