ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை.! விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க மதுரை நீதிமன்றம் மறுப்பு.!
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை வாயிலாக விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும் விசாரணை நடத்தலாம் என பரிந்துரைத்து இருந்தது.
இதனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை மூலம் விசாரிக்க நீதிமன்றம் தடை விதித்து இருந்தது. இந்த தடையை நீக்க கோரி தமிழக அரசு மதுரை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்து இருந்தது.
இந்த கோரிக்கை மனு இன்று விசாரணைக்கு வருகையில், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை வாயிலாக விஜயபாஸ்கர் மீது நடடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது எனவும், ஆணைய அறிக்கை வாயிலாக விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது எனவும் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார்.