நாளை வாக்கு எண்ணிக்கை.. வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குறித்து ஆய்வு!

Default Image

ஈரோடு கிழக்க்கில் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட எஸ்.பி. சசிமோகன் பாதுகாப்பு குறித்து ஆய்வு.

ஈரோடு வாக்குப்பதிவு:

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு பதிவு 27-ஆம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவடைந்தது. ஈரோட்டில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த அனல்பறக்கும் பரப்புரை 25ம் தேதி மாலை 6 மணியுடன் ஓய்வு பெற்றதை அடுத்து, 27ம் தேதி வாக்குப்பதிவு முடிந்தது.

களத்தில் 77 வேட்பாளர்கள்:

erodeelection26

ஈரோடு கிழக்கில் 33 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட 238 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இடைத்தேர்தலில் 74.74 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டுள்ளனர்.

15 சுற்று வாக்கு எண்ணிக்கை:

erodebyelectionresult28

நேற்று வாக்குப்பதிவு நிறைவு பெற்றதை தொடர்ந்து, மின்னணு இயந்திரங்களுக்கு சீல் வைத்தது தேர்தல் ஆணையம். வாக்கு இயந்திரங்கள் உள்ள இடத்தில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் 15 சுற்றுகளாக எண்ணப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார். வாக்கு எண்ணிக்கைக்கு 16 மேசைகள் போடப்பட்டுள்ளதாகவும்,77 வேட்பாளர்கள் இருப்பதால் காலதாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக 2 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட உள்ளது எனவும் கூறியிருந்தார்.

பாதுகாப்பு குறித்து ஆய்வு:

erode16

மேலும், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட எஸ்.பி. சசிமோகன் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட காவல்துறை சார்பில் 750 காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளதாக மாவட்ட எஸ்.பி. சசிமோகன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்