வருமான வரி நோட்டீஸ் – வழக்கை வாபஸ் பெற்றார் ஓபிஎஸ்!
வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெற்றார் ஓபிஎஸ்.
வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை திரும்ப பெற்றார் ஓ.பன்னீர்செல்வம். நோட்டீஸை எதிர்த்து வருமான வரித்துறையிலேயே மேல்முறையீடு செய்ததால் மனுவை திரும்ப பெறுவதாக விளக்கமளித்துள்ளார். தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு, அலுவலகங்களில் நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
கந்த 2015-16-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கு ரூ.20 லட்சம், 2017-18-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கு ரூ.82.12 கோடி வாரியாக செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில், வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை ஓபிஎஸ் வாபஸ் பெற்றார்.