1901-க்கு பின் மிகவும் வெப்பமான பிப்ரவரி மாதம் இந்த ஆண்டு தான் – இந்திய வானிலை ஆய்வு மையம்
2023 பிப்ரவரி மாதம் இதுவரை பதிவாகாத அளவு அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளதால், மிகவும் வெப்பமான பிப்ரவரி மாதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக பருவ மழை பெய்து வந்த நிலையில் பருவமழை முடிவுக்கு வந்துள்ளது. தற்போது தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வந்தாலும், பல மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வருகிறது.
இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில். இந்த பிப்ரவரி மாதம் மிகவும் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக சராசரி வெப்பநிலை 27.8 டிகிரி செல்சியஸ் ஆகும்.
வெப்பமான பிப்ரவரி மாதம்
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 29.54 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 1901க்கு பிறகு 2006 பிப்ரவரியில் 29.32 டிகிரி செல்சியஸ், 2016 பிப்ரவரி 29.48 டிகிரி செல்ஸியஸ் அதிகபட்ச வெப்பநிலையாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால் 2023 பிப்ரவரி மாதம் இதுவரை பதிவாகாத அளவு அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளதால், மிகவும் வெப்பமான பிப்ரவரி மாதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.