மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Default Image

என் அன்புக் கட்டளையை ஏற்றுப் புத்தகங்களைப் பிறந்தநாள் பரிசாகக் கொண்டுவந்த உடன்பிறப்புகளுக்கு மஞ்சள்பையுடன் மரக்கன்றுகளை நன்றியாக வழங்கினேன் என முதல்வர் ட்வீட். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பின், அண்ணா அறிவாலயத்தில் மரக்கன்றை நட்டு, கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். அப்போது, புத்தகங்களைப் பிறந்தநாள் பரிசாகக் கொண்டுவந்தவர்களுக்கு, மஞ்சள்பையுடன் மரக்கன்றுகளை வழங்கினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் 

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,  “மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்!” என்றார் முத்தமிழறிஞர் கலைஞர். அவரது சொற்படி இந்த ஆண்டும் மரக்கன்று ஒன்றை நட்டுவைத்தேன்.

என் அன்புக் கட்டளையை ஏற்றுப் புத்தகங்களைப் பிறந்தநாள் பரிசாகக் கொண்டுவந்த உடன்பிறப்புகளுக்கு மஞ்சள்பையுடன் மரக்கன்றுகளை நன்றியாக வழங்கினேன். அவற்றை நட்டு, பராமரித்து வளர்ப்பீர் நாளை நலமாக!’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
2025 jallikattu Competition
RoadAccident
bank robbry
Arunvijay Bala
Bumrah - Bhuvneshwar kumar
Vidaamuyarchi Trailer