டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழில் பிறந்தநாள் வாழ்த்து!
பரபரப்பான சூழலுக்கு மத்தியில் தமிழக முதல்வருக்கு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழில் பிறந்தநாள் வாழ்த்து.
மணிஷ் சிசோடியா ராஜினாமா:
டெல்லியில் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கைதான துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அதுமட்டுமில்லாமல் ஹவாலா பண மோசடி வழக்கில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைதாகி சிறையில் உள்ள டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
டெல்லியில் பரபரப்பான சூழல்:
மதுபான கொள்கை முறைகேடு வழக்கிலும் சத்யேந்தர் ஜெயினிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தது. இவரின் ராஜினாமா கடிதத்தையும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டார். டெல்லியில் ஒரே நேரத்தில் முறைகேடு வழக்கில் துணை முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பான சூழலை நிலவி வரும் நிலையில், தமிழக முதல்வருக்கு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சருக்கு வாழ்த்து:
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். முதலமைச்சரின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தாங்கள் நீண்ட நாள் ஆரோக்கியமான ஆயுளுடன் வாழ இறைவனை பிராத்திக்கின்றேன் என்று பதிவிட்டுள்ளார். டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், அம்மாநில முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் திரு @mkstalin அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தாங்கள் நீண்ட நாள் ஆரோக்கியமான ஆயுளுடன் வாழ இறைவனை பிராத்திக்கின்றேன்.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) March 1, 2023