காவல் ஆணையர் அலுவலக அதிகாரிக்கு சிறைத்தண்டனை விதிப்பு!
காவல்துறை அதிகாரி அசோக்குமாருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
காவல் அதிகாரி லஞ்சம்:
ரூ.2000 லஞ்சம் பெற்ற வழக்கில் சென்னை காவல் ஆணையர் அலுவலக அதிகாரி அசோக் குமாருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2003-ல் விடுப்பு கடிதம் தராமல் இருந்த எழும்பூர் எஸ்ஐ சண்முகத்தின் ஊதியத்தில் மாதம் ரூ.500 பிடித்தம் செய்துள்ளார்.
மேல்முறையீடு:
மாதம் ரூ.500 வீதம் ஊதியத்தில் பிடித்தம் செய்து எஸ்ஐ சண்முகத்துக்கு 2008-ல் ஓய்வுபெற அனுமதி தரப்பட்டது. ஓய்வுப்பெற அனுமதி வழங்கிய உத்தரவை எதிர்த்து இணை ஆணையர் அலுவலகம் மூலம் அரசிடம் மேல்முறையீடு செய்தார் எஸ்ஐ. மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க எஸ்ஐ சண்முகத்திடம் ரூ.2,000 லஞ்சம் கேட்டுள்ளார் அதிகாரி அசோக்குமார். அரசுக்கு மேல்முறையீடு மனு அனுப்பப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள அசோக்குமார் ரூ.2,000 லஞ்சம் கேட்டுள்ளார்.
சிறைத்தண்டனை விதிப்பு:
2008-ல் கைது செய்யப்பட்ட அதிகாரி அசோக்குமார் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை எனக்கூறி 2013-ல் விடுதலை செய்யப்பட்டார். அசோக்குமார் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் காவல்துறை அதிகாரி அசோக்குமாருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.