சிசோடியா கைது.! 2024இல் வட்டியும் முதலுமாக திரும்ப கிடைக்கும்.! திமுக எம்பி டி.ஆர்.பாலு கண்டனம்.!
சிசோடியா கைது நடவடிக்கை போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வட்டியும் முதலுமாக திருப்பி கொடுப்பார்கள். – திமுக எம்பி டி.ஆர்.பாலு கண்டனம்.
டெல்லி துணை முதல்வரும், டெல்லி நிதியமைச்சருமான மணீஷ் சிசோடியா கடந்த ஞாயிற்று கிழமை இரவு சிபிஐ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். டெல்லில் அமல்படுத்தப்பட்ட புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிசோடியா கைது : இதனை அடுத்து, நேற்று அவரை டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, மணீஷ் சிசோடியவை 5 நாள் சிபிஐ காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து தற்போது அவர் சிபிஐ காவலில் விசாரணை வளையத்திற்குள் உள்ளார்.
கம்பீர் கருத்து : சிபிஐ-இன் இந்த நடவடிக்கைகுறித்து அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். சில மணி நேரத்திற்கு முன்பு தான் பாஜக எம்பி கௌதம் கம்பீர் இந்த கைது நடவடிக்கை குறித்து மனோஜ் சிசோடியாவை விமர்சித்து பேசியிருந்தார்.
டி.ஆர்.பாலு கண்டனம் : தற்போது திமுக எம்பி டி.ஆர்.பாலு சேத்தியாளர்களிடம் கூறுகையில், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் கைதுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்தார். மேலும், சிபிஐ போன்ற அரசு அமைப்புகள் மூலம் அடக்குமுறையை மேற்கொள்வதை பாஜக கைவிட வேண்டும் என குறிப்பிட்டார்.
வட்டியும் முதலும்.. : அடுத்ததாக, இந்த நடவடிக்கையை தொடர்ந்தால், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வட்டியும் முதலுமாக திருப்பி கொடுப்பார்கள் என பேசியிருந்தார் திமுக எம்பி டி.ஆர்.பாலு.