இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை.! பாஜக எம்.பி கெளதம் கம்பீர் காட்டம்.!
இந்தியாவில் முதல் முறையாக ஓர் கல்வி அமைச்சர் மதுபான கொள்கை முறைகேட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். – பாஜக எம்பி கௌதம் கம்பீர் விமர்சனம்.
டெல்லி துணை முதல்வரும், டெல்லி நிதியமைச்சருமான மணீஷ் சிசோடியா கடந்த ஞாயிற்று கிழமை இரவு சிபிஐ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். டெல்லில் அமல்படுத்தப்பட்ட புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிசோடியா கைது : இதனை அடுத்து, நேற்று அவரை டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, மணீஷ் சிசோடியவை 5 நாள் சிபிஐ காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து தற்போது அவர் சிபிஐ காவலில் விசாரணை வளையத்திற்குள் உள்ளார்.
கம்பீர் விமர்சனம் : இந்த கைது நடவடிக்கை குறித்து டெல்லி பாஜக எம்பி கௌதம் கம்பீர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் குறிப்பிடுகையில், இந்தியாவில் முதல் முறையாக ஓர் கல்வி அமைச்சர் மதுபான கொள்கை முறைகேட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த வழக்கு நிருபிக்கப்பட்ட ஒன்று எனவும், இதற்கு அவர்கள் தகுதியானவர்கள் தான் எனவும் தனது விமர்சனத்தை பாஜக எம்பி கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.