மும்பைக்குள் நுழைந்த ‘ஆபத்தான’ மனிதன்.? சீனா, பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவனாம்.! NIA தீவிர தேடுதல் வேட்டை.!

Default Image

மும்பை நகருக்குள் ஆபத்தான நபர் ஒருவர் உள்ளே நுழைந்ததாக என்ஐஏ அமைப்பானது மும்பை காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த நபரை தேடும் பணியில் மும்பை காவல் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

தேசிய புலனாய்வு துறையான என்ஐஏ (NIA) அவ்வப்போது நாடு முழுவதும் பயங்கவராத செயல்பாடுகள் உள்ள பகுதிகளாக அவர்கள் சந்தேகிக்கும் இடஙக்ளில் திடீர் திடீரென சோதனை இடுவது வழக்கமான ஒன்று. அதே போல சோதனைக்கு பிறகு அவர்களை ரகசிய கண்காணிப்பிலும் வைத்து இருப்பர்.

ஆபத்தான நபர் : அதே போல, தற்போது என்ஐஏ மும்பை காவல் துறைக்கு ஓர் தகவலை கூறியுள்ளது. அதாவது, சீனா, ஹாங்காங்,பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தீவிரவாத பயிற்சி பெற்ற ஓர் ஆபத்தான நபர் மும்பை நகருக்குள் நுழைந்ததாக சந்தேகிப்பதாக கூறியுள்ளனர்.

என்ஐஏ எச்சரிக்கை : என்ஐஏ கொடுத்த தகவலின் அடிப்படையில், அந்த நபரை மும்பை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதாவது . அந்த நபரின் நடமாட்டம் முதலில் மத்திய பிரதேசத்தில் மேமனில் இருந்ததாக முதலில் NIA எச்சரித்து இருந்துள்ளது. அதனால் அந்த நபரை தேடும் முயற்சியில் மும்பை காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்