ரத்த காயங்களுடன் சமந்தா…புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மயோசிடிஸ் நோய்யில் இருந்து நடிகை சமந்தா மெது மெதுவாக மீண்டு வருகிறார் என்றே கூறலாம். நீண்ட மாதங்களுக்கு பிறகு, சமந்தா மீண்டும் தான் கமிட் ஆகியுள்ள படங்களில் நடிக்கவும் தொடங்கிவிட்டார். அதன்படி, அவர் தற்போது வருண் தவானுடன் இணைந்து நடிக்கவிருக்கும் ‘சிட்டாடல்’ வெப் தொடர் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதிரடி ஆக்சன் காட்சிகள் கொண்ட இந்த வெப் தொடர் படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சி ஒன்றில் சமந்தா நடித்து வந்த நிலையில், எதிர்பாராத விதமாக அவருடைய கையில் ரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதற்கான புகைப்படத்தையும், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
காயங்கள் ஏற்பட்டாலும், அதயெல்லாம் பெரிதாக எடுத்துகொள்ளத சமந்தா மீண்டும் படப்பிடிப்பில் இணைந்து தன்னுடைய காட்சிகளை நடித்து கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவருடைய ரசிகர்கள் சற்று கண் கலங்கி உள்ளனர். மேலும் நெட்டிசன்கள், பலரும் அவருடைய அர்ப்பணிப்பை பாராட்டி வருகிறார்கள்.
மேலும் நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘சாகுந்தலம்’ திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.