தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம்

Default Image

தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இன்று தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் லேசானது அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் மார்ச் 4ல் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்