ரஷ்ய அதிபர் புதின் அவரது நெருங்கிய வட்டத்தினரால் கொல்லப்படுவார்- அதிபர்
புடின் விரைவில் தனது நெருங்கிய நண்பர்களால் கொல்லப்படுவார் என உக்ரைன் அதிபர் பேச்சு.
உக்ரைன் போர்
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த வருடம் பிப்ரவரி 24-ஆம் தேதி போர் தொடங்கியது. இந்த போர் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இந்த போரில் இரண்டு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். மேலும் பல சேதங்கள் ஏற்பட்டன.
இந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் மீதான போரை நிறுத்திக் கொள்ளுமாறு பல்வேறு நாடுகள் அறிவுறுத்தி வருகிறது. இந்த போரினால் உலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கையில் எடுத்தன. மேலும் மிகப்பெரிய அளவிலான பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டது.
உக்ரைனுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில், ஆயுதங்களையும் வழங்கி வருகின்றனர். மேலும், அவ்வப்போது ரஷ்ய அதிபர் புடின் குறித்த தகவல்களும் வெளியாகி வருகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
புடின் நெருங்கிய நண்பர்களால் கொல்லப்படுவார்
இதனை எடுத்து உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து, உக்ரைன் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்பட வெளியீட்டு விழாவில் பேசிய உக்ரைன் அதிபர், புதின் தற்போது பலவீனமாகி வருகிறார். அவர் விரைவில் தனது நெருங்கிய நண்பர்களால் கொல்லப்படுவார் என கூறியதாக செய்திகள் வெளியாகி வருகிறது. உக்ரைன் அதிபரின் இந்த பேச்சு முக்கியமானதாக கருதப்படுகிறது.