ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், நேற்று காலை 7 மணி முதல், மாலை 6 மணி வரை 238 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.
வாக்குப்பதிவு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 74.74 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. நேற்று வாக்குப்பதிவு நிறைவு பெற்றதை தொடர்ந்து, வாக்குச்சாவடிகளில் மின்னணு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆட்சியர், அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆலோசனையில் ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார், பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி பிரமுகர்களிடம் வாக்கு எண்ணிக்கை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.