பிரதமர் மோடியின் சொந்த தொகுதிக்கும்.. அவரது சொந்த ஊருக்கும் உள்ள பழங்கால தொடர்பு.? பல்கலைக்கழகம் தீவிர ஆராய்ச்சி.!
பிரதமர் மோடி பிறந்த ஊரான குஜராத் மாநிலத்தில் வாட் நகருக்கும் , அதே போல அவர் பாராளுமன்ற தேர்தலில் ஜெயித்த உத்திர பிரதேச மாநிலம் வாரணாசிக்கும் உள்ள தொடர்பை பனாரஸ் பல்கலைக்கழகம் கண்டறிய உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி பிறந்த குஜராத் மாநிலம் வாட் நகரில் அண்மையில் அகழ்வாராச்சியாளர்கள் ஆய்வு செய்த போது பண்டைய காலத்தில் புத்த மத அடையாளங்கள் இருந்துள்ளதாகவும், காசிக்கும் வாட் நகருக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.
வாட் – வாரணாசி : இதனை அடுத்து தான் , வாரணாசி, பனாரஸ் பல்கலைக்கழகமானது தற்போது ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது. அதாவது, பிரதமர் மோடி பிறந்த ஊரான குஜராத் மாநிலத்தில் வாட் நகருக்கும் , அதே போல அவர் பாராளுமன்ற தேர்தலில் ஜெயித்த உத்திர பிரதேச மாநிலம் வாரணாசிக்கும் உள்ள தொடர்பை கண்டறிய உள்ளனர்.
ஆன்மீக தொடர்பு : இந்த குழுவில் 4 கல்லூரி பேராசியர்கள் உள்ளனர் . அதில் பேராசிரியர் அதுல் திரிபாதி கூறுகையில் , வாட்நகர் அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு, அந்தப் பகுதியானது பௌத்த மதத்தின் முக்கிய மையமாக இருந்தது தெரிய வந்துள்ளது. காசிக்கும் வாட் நகருக்கும் உள்ள தொடர்பை நிராகரிக்க முடியாது. ஏனெனில், வாட்நகரில் பல மத அடையாளங்கள் காணப்படுகின்றன. பல வெளிநாட்டு எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்களில் வட்நாகர் பற்றி குறிப்பிட்டுள்ளனர். எனவும் அவர் கூறினார்.